விழியே... ஏன் வியர்க்க நினைக்கிறாய்...???
விழியே என் விழியே
ஏன் வியர்க்க நினைக்கிறாய்
தனியாய் நான் நடந்தால்
ஏன் பார்வை இழக்கிறாய்...!
கடற்கரையில் நடந்த போது
காற்றும் கூட தீண்டவில்லை
அலைகள் போல உன் நியாபகங்கள்
அடிக்கடி வந்து மனதை உடைக்கும்...!
வீசும் காற்றும் அவளை போல
விலகிச் சென்று புயலாய் மாறும்
பேசிச் சென்ற வார்த்தைகள் எல்லாம்
பேசாமல் என்னை கொன்று புதைக்கும்...!
அந்த ஆகாயம் கூட
என்னை போல அழுகிறது
ஆனாலும் அதனை இங்கு
அத்தனை பூக்களும் ரசிக்கிறது...!
பூவே உன் மாற்றம் மனமாற்றம்
அது எப்படி என்று புரியவில்லை
பூக்கள் நிறம் மாறும்... மனம் மாறும்
உன்னால் நானும் உணர்ந்து கொண்டேன்...!