கருப்பு பணம் மீட்போம்
நாட்டை பற்றிக்கொண்டிருக்கும்
புற்று நோய் ,
இந்தியனின் ரத்தத்தை உருஞ்சும் ,
ரத்த பேய் !
வரி ஏய்ப்பு வழியிலான சேமிப்பு ,
சுதந்திரம் கொடுத்தும்
வெளியில் போகாத வெள்ளைக்காரர்கள் !
இந்தியாவின் வளத்தில்
ஜெர்மனியும் , சுவிச்சும் ,பிரான்சும்
செழிக்குது ,
அவர்கள் சுகத்துக்கு சொந்தக்காரர்கலாகினர் ,
நாமோ வருமைக்காரர்கலாகிவிட்டோம் !
கொடுத்ததை சம்பாதிக்க
வெளிநாட்டிற்கு படையெடுக்கும்
படித்த இளைஞர்கள் !
பணக்கார நாட்டை
கடன்காரனாக்கி பிச்சைஎடுக்க வைக்கும்
கருப்பு சகாப்தம் !
இந்திய செல்வத்தை
வெளிநாடுகளில் அடகுவைத்துவிட்ட
மோசடி முதலாளிகள் !
வெள்ளை சட்டைகாரர்களின்
கருப்பு முகம் ,
அரசியல் திருடர்களின் ,
அந்தரங்க சேமிப்பறை!
கருப்பு பண விஷயத்தில்
கல்லாட்டம் ஆடும் அரசு ,
தள்ளாட்டம் போடும் சிபிஐ !
நேற்றைய குற்றவாளிகளை
காப்பாற்ற நினைக்கும்
இன்றைய அரசியல் குற்றவாளிகள் ,
எதிர் கட்சி , ஆளும் கட்சி என்றாலும் ,
இவர்கள் எல்லாம் அரசியல் ஜாதி !
அன்று அந்நியன் சுரண்டினான் ,
இன்று நம்மை நாமே சுரண்டிக்கொல்கிறோம் ,
இந்தியனை பட்டினி போட்டு விட்டு
எவனையோ வாழவைக்கிறோம் !
முடியாதது ஒன்றும் இல்லை ,
முடிவெடுத்து முயற்சியில் இறங்குவோம் ,
கருப்பு பணம் மீட்போம் ,
இந்தியாவை காப்போம் !
காணமல் போன கருப்பு பணம் வந்தால்
இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திற்கும்
பத்து பத்து கோடி ,
கிராமம் செழித்தல் இந்தியா செழிக்கும் ,
நாமும் செழிப்போம் !