சமுதாய அவலங்கள்(கவிதை திருவிழா )
நிமிடங்கள் தட்டும் நொடியில்
நாடும்கெட்டு நம்வாழ்வும் கெட்டுபோகிறது
மதுவின் மரணத்தை அறிந்தும்
மறக்காத மனிதர்கள் எத்தனை
இருவிரல் சேர்த்து இழுக்கும்
உதட்டில் பழுக்கும் புற்று நோயை
தேடிக்கொள்ளும் மனிதர்கள் எத்தனை
காதல் கண்கள் கூடும்
காம கோயிலுக்கு மானம் இல்லாமல்
வரதட்சணை வாங்கும் மனிதர்கள் எத்தனை
கற்றும் அறிந்த கருவில் தொற்றுவியாதியாய்
உன்னையே கண்டபின்னும்
கருகலைக்கும் மனிதர்கள் எத்தனை
அரசன் முதல் ஆண்டிவரை
அழியும் உடலுக்கு பில்லி சூனியம் வைத்து
கல்வி செல்லும் கன்னியர்களின்
கற்பை பறிக்கும் மனிதர்கள் எத்தனை ...!
எல்லாம் தெரிந்தும் வருந்தும் மக்கள்
வருமைகோட்டில் நின்றதால்
பிறந்தும் திருந்தாமல் இறந்தும்
வாழ்கிறார்கள் இந்த சமுதாயத்தில் ....!