சமூக அவலங்கள் (கவிதை திருவிழா)

எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லாமல் இருக்கும்
என் தேசத்து இளைஞ்சனே!

சும்மா கிடைக்க வில்லை
உன் தேசத்து சுதந்திரம்!
ஒடிந்த எலும்புகள்
கொட்டிய குருதிகள்
அர்பனித்த உயிர்கள்
இன்னும் தொட்டு தொடரும் அதன் வலிகள்!

சாதிக்க வேண்டிய நீயோ ..
சாதிகளின் பிடிக்குள்!
சட்டத்தின் தேவைகளை விட
அதன் ஓட்டை களையே அதிகம் தேடுகிறாய்..
சிலதி வலைக்குள் சிக்கிய
சிறு பூச்சியாய்
சின்னத் திரைக்குள்ளும்
சினிமா நடிகனின் மன்றதிற்குள்ளும்..

நாகரீகம் என்ற சொல்லுக்குள்
கலாச்சார சீரழிவு!

உன்னை உருவாக்க
நம் நாடு செலவழிக்கிறது..
நீயோ நாடுவிட்டு நாடு ஓடுகிறாய்
நல்லு காசு பார்ப்பதற்கு!

ஆயிரங்களின் மதிப்பில்
உன் வாக்கு சீட்டின் உரிமைகள்
தெரிந்தே திருட விடுகிறாய்

உன் வீட்டு தொழுவத்தை பார்த்து
உவ்வே ....உவ்வே... கொட்டிய நீ
பாலை வனத்தில்
பாதை புரியாத பயணத்தில்
ஒட்டகம் மேய்க்கச் செல்கிறாய்!

முதியோர் இல்லத்தில்
உன்னை பெற்றவர்கள்..

வரம்களுக்காகவே தவங்கள்!
இங்கே ,
தவங்களே தடை கற்களாய்..
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுமா ?
வரதட்சனை வில்லருகே சீதைகள்..
முதிர் கன்னிகளின் பெருமூச்சில்
ராமனும்.. ராவணனும்
சரிசமமாகவே ..?
வசந்த ருதுக்களுக்காக
வாசல் திறந்த வரி வண்டுகளோ,
பூக்களை மறந்து
பொறிகளைத் தேடுகிறது..

தன் கைத்தடியும்....கண்ணாடியும் ..
களவு போன சோகத்தில்..
புகார் செய்ய சென்ற காந்தியடிகள்
காவல் நிலையத்திலிருந்து
கவலையுடன் திரும்புகிறார்!

அடகுக்கடை வரிசையில்
கல்விக்கதிபதி சரசுவதி..

எல்லாம் இருக்கும் என் தேசத்தில் ,
எதுவும் இல்லாமல் இளைஞ்சர்கள்!

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (15-Jun-12, 2:23 pm)
பார்வை : 198

மேலே