(கட்டு) மானஸ்தன்

தன் வீட்டைத்
தானே கட்டும்
கட்டு'மான'ஸ்தன்..

சொந்தக் காலிலே
தங்கியாக வேண்டுமென்று
முக்காலுடம்பே பாதமா?

உன்னைச் சுற்றியுள்ள
வன்மூடிக் கவசத்தை
'மென்மூடி'யாலா சுரப்பது??

சுண்ணாம்பில் சாந்துவைக்கச்
சொல்லித் தந்ததே
நீதானே!

வலம்புரியோ, இடம்புரியோ
உன் காதில் ஓதித்தான்
மரணமே புரிகிறது

{மென்மூடி(mantle ) - நத்தையினத்தின் ஓட்டைச் சுரக்கும் அங்கம்
.*** இவ்வினத்தின் தற்சிறப்பியல்புகளில் ஒன்று - தசைச் செறிவான பாதம்.}

எழுதியவர் : ரூஹூல் ரஸ்மி (15-Jun-12, 2:32 pm)
சேர்த்தது : roohulrazmi
பார்வை : 167

மேலே