சிறகை விரித்தெழு.
என் எண்ணக் குருவியே!
இது போட்டிகள் நிறைந்த
உலகம்.
நேரம் வருமென்று
காத்திருக்காதே!
திறமையுள்ளவரையும்
இங்கே மனிதத்
திமிங்கலங்கள்-விழுங்கிக்
கொண்டுதான் இருக்கின்றனர்.
புரட்சிகள் புரியும்- உந்தன்
புதுமையான எண்ணங்களை
இச்சமூகத்திற்கு விரைவாக
விளக்க உன் வண்ணச்
சிறகுகளை விரித்தெழு!