மின் துண்டிப்பு
விஞ்ஞானம் என்று தோன்றியதோ
அன்றிலிருந்துதான் நம் வாழ்க்கை
நீங்கியது இருளிலிருந்து !
அஞ்ஞானம் பேசும் இன்றைய உலகில்
அம்மாவின் ஆசைகள் எப்போது புரியும்
ஒவ்வொன்றையும் இழக்கிறோமே
மின் துண்டிப்பால் !
அக்காளின் ஆசைகளை
களவாடுகிறதே
மின்துண்டிப்பால்!
அயர்ந்து உறங்கும்
தந்தையின் தூக்கம்
கொசுவின் தீண்டலால்
கலைகிறதே
மின்வெட்டு எமனால் !
கொசுவுக்கு கிடைக்கும்
வாழ்க்கை
நமக்கு கிட்டவில்லையே !
ஒப்பாரி வைக்க
அந்தக்கால
அரிக்கேன் விளக்குக் கூட இல்லையே?
துளசி வாழ்க்கை தீர்ப்பதற்கு
சிம்னி விளக்குக் கூட அருகதை
இல்லாமல் போயிற்றே
மின்துண்டிப்பால் !
மட்டைப் பந்து வீச்சாளர்
அந்த கன நேர மின்துண்டிப்பால்
ரன்கள் இழந்தாலும்
ஓட்டம் என்றுமே ஒன்றுதான்
மின்சார அளவைப் பொறுத்து!
நன்கு
கற்கும் மாணாக்கருக்கு
மின்தடை ஒன்றும்
வாழ்க்கையை கூறு
போடுவதில்லை
என்றுமே!
எ சி இல்லை என்றால்
வேப்ப மரம் இருக்கிறதே
தென்றலாக வீசுமே !
இயற்கை காற்று
நல்லதுதானே நம்
உடலுக்கும் !
போர்க்கொடி ஏந்தி
என்ன பயன்?
மொழிகள் தேசியமானதால்
என்ன பயன்?
அவரவர்களுக்கு அவரவர்
கொள்கைதானே!
இதுதான் மனித நேயமோ?
என்று தோன்றுகிறதே!
சுயநலவாதிகள் வாழும்
இந்நாட்டில் ஆடம்பரமாம்
சுவரொட்டிகள்!
கூட்டங்கள்!
பிறந்தநாள் விழாக்கள்!
பெற்றவர்கள் பிறந்தநாளை
மறந்து விட்ட துரோகிகள்
நம் நாட்டில் இன்றும்!