முள்ளிவாய்க்கால்
வானம்
புகைப்படலம் காரித்து
மண்ணில்
குருதிகலந்திருந்தது!!!!!
நன்னீரில் உப்புக்கரிசல்
இணைந்து உறவுகளின்
உதிரம் பிறையோடிருந்தது!!!!
அழுகைக்குரல்கல்
ஓய்ந்ததும் அனுங்கள்
தொனிக்குறைந்திருந்தது!!!
தென்னை தலையிழந்தும்
வயல்கள் கண்னிவெடிகளை
சுமந்து முடமாக்கி
கந்தகங்கங்களை சுரந்து
போரிட்டது!!!
பெண்ணியம்
புதர்பரப்பில் மாண்டு
இனவாதிகளுக்கு இரையாகிக்கிடந்தது!!!
சன்னங்களுக்கும்
எறிகனைகளும்
கொத்துக்குண்டுகளின்
சத்தமும் வானைப்பிழந்து
மீத உயிர்களுடன்
சல்லடை புரிந்தது!!!!!!
வெள்ளைக்கொடி
சிவப்பாகி அவஸ்தைகளின்
அலரல் அழச்செய்தது!!!
காணும்
இடங்களும் கழுகு கொத்தும் பிணங்கள்
கண்னெதிரேயும் கொலைகள்
கணப்பொழுதுகளிள்
நரகமாயிருந்தது!!!!!!!
பசிக்காக
பரிதவித்தமனிதர்களும்
பதுங்குக்குழிக்குள்
பலியாக்கப்பட்ட சடலங்களுடன்
ஒப்பாரியேனும் ஓயாமலிருந்தது!!!
தாயிழந்த சேயும்
சேயிழந்த தந்தையும்
உறவிழந்த உயிருமாய்
மிஞ்சியதும் அகதியானது!!!!!!
உணவும்
உக்கிப்போனது தண்னீரும்
விசமானது கப்பலுக்கான
காத்திருப்பில் கண்களிலும்
மரணமிருந்தது!!!
ஓர் உயிருக்கு
பதிலாக கணக்கற்றவுடல்கல்
மண்ணிலே புதைக்கப்பட்டுக்கொண்டிருந்தது!!!!!!
உலக ஒத்துழைப்புடன்
ஒரங்கட்டப்பட்ட ஓரினம்
சொந்தமண்ணில் புலம்மியது
கண்டு நெஞ்சம் நெருப்பாய்
எரிந்தது!!!!!!
உரிமைப்போராளிகள்
உயிர் பறிக்கப்பட்டது
உண்மைகள்
மூடி மறைக்கப்பட்டிருந்தது!!!!
...............................
...........................
முள்ளிவாய்க்கால்
இனவாதத்துக்கு முன்னுரையானாலும்
முடிவில்லா
உரிமைப்போருக்கு முற்றுப்புள்ளியாகாது!!!