துறவியாய்
காலம்!
நம்மை தினம் தினம்
கண்களில் புலப்படாமல்
கொள்ளுகிறது
உருமாற்றியே!
வருடம் தோறும்
வரவு செலவுக் கணக்கை
தினசரி
பார்த்துப் பார்த்து
வயதும் மறைந்து போகிறது
வருடங்களோடு!
எதோ ஓர் ஆசையில்
பட்சிகளாய் இருந்தோம்
பறந்து திரியும்
பூச்சிகளாய்
நாம்!