காக்கை சிறகினிலே

காக்காவை அழைத்து
தாத்தா தான் என்று நினைத்து
கை நிறைய சோற்றுப் பருக்கையை
காக்கா விற்கு வைக்க
காக்கா சாப்பிடுகிறது
தாத்தாவின் திதிநாளில் !

வீட்டு முற்றத்தில்
பறக்கும் காக்கைகள்
வீட்டுக் கூரையில்
அமர சோற்றுப் பருக்கையை
உண்ணுவதைப் பார்த்து
தாத்தா வந்ததாய்
அன்போடு அதன் அலகைப்
பார்க்கிறாள்
தாத்தாவின் பாட்டி !

எழுதியவர் : செயா ரெத்தினம் (21-Jun-12, 1:10 pm)
பார்வை : 309

மேலே