[265 ] அழகன்..!
அணிமுடி தாங்க வந்த,
....அரசனோ இவனும் இல்லை!
மணிமொழி மாதர் சொல்லி
....மரவுரி அணிந்தோன் இல்லை!
துணியுடல் கந்தை யாகத்
....துவைத்தவர், ஆணி ஏற்றிப்
பிணிக்கினும் பிழைமன் னித்துப்
....பேருயிர் ஈந்த வள்ளல்!
(வேறு)
ஐயோ,இவர் வடிவேன்பதோர் அழியாவழ கென்பார்!
போய்யோடிடச் சொல்லார்,இவர் புறத்தாலழ கில்லை!
மய்யோடிய மனத்தாரொரு மரமேற்றிய முகிலாய்ப்
பெய்தோடிய செந்நீர்வழிப் பிய்ந்தோடிய அழகன்!
-௦-