பெண்ணே நீ,சக்தியடி........

முகம் எப்பொழுதும் திங்கள்தான்,
கனிவான கண்கள் வெடிக்கும் சூரியன்தான்,
இதமான இதழ்கள் கள்வடியும் செவ்வாய்தான்,
கவி பாடிடும் குரல்மொழி புதனுதவிதான்.
உலகை டீச்சராய் வழிப்படுத்துதலில் குருவே,
கண்ணான காதலனுக்கு கவிதையாய் சுக்கிரன்,
விதி எதிர்ப்பின், எதிரிகளின் துவம்சம் சனியாட்சி.
கண்ணிறைந்த கணவனுக்கு இன்பமூட்டுவதில் ராகு கேது.........இப்படி எல்லாமாக இருக்கும் பெண்ணை தங்களின் வசதிக்கேற்ப எப்படியெல்லாம் வசை பாடுகிறார்கள் மனசாட்சியே இல்லாத சில ஆண்கள்..

கடவுள் செய்ய தேவைதான் ஆணுக்கு,
தேடிநிற்கும் இந்த சமபாதி பெண் .........விலங்கில் இருந்து மனிதனை வேறு படுத்திக்காட்டும் காதலை உனக்கு காட்டியவள் பெண் இல்லையெனில் நீ இன்னமும் விலங்குதான்....

எழுதியவர் : கவிதை தேவதை. (24-Jun-12, 10:39 am)
பார்வை : 333

மேலே