பேருந்தின் பயணங்களில்

ஒவ்வொரு
பேருந்துநிறுத்தத்தின்
நிழலிலும்
நிராகரிக்கப்பட்ட
நிஜமான காதல்
மௌனமாக
இளைப்பாருவதை யாரும்
கவனிப்பதில்லை!

சாளரத்தில்
சட்டென்று
விழிகளின்
வழியே மொழிகளைத் தவற
விடும் எவளேனும்
ஒருத்தி
என் ஞாபகக் கடலில்
நிலநடுக்கத்தைஏற்படுத்துவதை
தவிர்க்கமுடிவதில்லை!

முன் இருக்கையில் இருப்பவள்
முகம் எப்படி இருக்கும் என்ற
அவதானிப்புகள்
அடங்குவதில்லை!

நிமிடத்திற்கு நிமிடம்
நொடிக்கு நொடி
அருகில் நிற்போரும்
அமர்ந்திருப்போரும்
நம்மையே உற்றுப் பார்ப்பது
போன்ற தோற்றம் எப்போதும்
குறைவதில்லை!

எத்தனை எத்தனை
விந்தையான மனிதர்கள்!
நடத்துனருடன் சில்லரைச் சண்டை
பிடிப்பவர்கள்!
அடாத மழையிலும் விடாது
செல் மொழி பேசும்
குமரிகள்!
அழும் குழந்தையை
ஆசுவாசப்படுதும்
பெற்றோர்!

யார் சொன்னது
தனிமை என்று ஒன்று
உண்டென்று!
இந்த வாழ்க்கை
பயணமும் இப்படி
சில
மனிதர்களால் தான்
சுவாரசியமாகிறது!

எழுதியவர் : சரவணா (24-Jun-12, 2:14 am)
பார்வை : 419

மேலே