எதுவும் கடந்து போகும்..

எதுவும் கடந்து போகும்
அதுவே காலத்தின் நிதர்சனம்.

இன்று கைக்கு எட்டாமல் போவது
சொல்லாமல் சொல்லி செல்வது என்ன..?
நாளை என்னினும் ஒரு அதிசயத்தை உனக்கு தருவேன் என்பதையே.

உறங்க விடாமல் இன்று உன் கண்ணை நிரப்பும் துயரங்கள்,
விழி விரிய செய்யும் ஆச்சர்யங்களை சாதித்திட உன்னை தயார்படுத்தும்.

உனக்கு என்ன எல்லா கவலைகளையும் கடந்து வந்ததாய் நினைப்போ..?
கடலிடம் சென்று கேட்டு பார்,
அது சொல்லும் கண்ணீர் கதைகள் ஏராளம்.

கடவுள் செய்ததோ, விதி செய்ததோ
மாற்ற முடியாத ஒரு விசயத்திற்கு மருங்கி போவதில் என்ன பயன்?

அடிதாங்கி, வலிதாங்கி நடந்து வருகின்ற பாதையில் புதிதாய் ஒரு தடைக்கல்
ஓரம் தள்ளிவிடு, இல்லை ஒதுங்கி நடந்துவிடு, இல்லை நசுக்கி அழித்துவிடு
நீ சென்று சேர வேண்டிய தூரம் இன்னும் கிடக்கிறது.

சேர்ந்துவிடு, என்றும் உன்னை துவளவிடாது தாங்கும் நண்பர்களின் தோள்களை
வென்றுவிடு, கொஞ்சம் கொஞ்சம் கரைத்துவிட பார்க்கும் கவலைகளை.

எட்டு வைத்து பார்
எட்ட முடியாத உயரம் கூட உன் காலடியில், வெகுவிரைவில்..

எழுதியவர் : சு.முத்துக்குமார் (27-Jun-12, 8:16 pm)
சேர்த்தது : சுமுத்துக்குமார்
பார்வை : 1726

மேலே