சேகுவரா ...(கவிதை திருவிழா )
சேகுவரா ...
உறக்கம் கலைத்து ..
உயிர்தெழுந்து வா...
உன் உடன்பிறப்பாய் ..
தமிழினத்தலைவன் ..பிரபாகரன்
உனை துயில் களைய எழுப்புகிறான் ...
ஈழத் தேசத்திற்கு விடுதலை வேண்டி ..
உறங்கா மக்களின் கண்களுக்கு
உன் வீரத்தின் இரக்கம் வேண்டி ...
உனைத் உயிர்த் தெழுப்புகிறான் ..!
தமிழ் தேசத்துத் தலைவர்கள்..
பதராக வளரக்கண்டுப் பதறி ..
உனைத் துயில் களைய எழுப்புகிறான் ...
சேகுவரா ...
உறக்கம் கலைத்து ..
உயிர்தெழுந்து வா...!
ஈழ மக்களின் விழிகளில் ஈரமில்லை ..
இதைக் கண்டு போலியாய்ப் பதைக்கும்.
பகட்டு அரசியல்வாதிகளுக்கு ..
இதயத்தில் ஈரமேயில்லை ..!?
மாற்றான் தோட்டத்து ..வீர மைந்தனே ..
சாம்பலாய்ப் போன ...
எம் தமிழ்த் தேசத்தில் ..
இனவெறியை வெல்ல ..
என்னுடன் நீயும் ..
புதிதாய்ப் பிறக்க ...
புரட்சியாய் வெடிக்க ..
அநீதிக்கு மரணமணி அடிக்க..
இனவெறிப்பிடித்த இழிந்தர்கூட்டம் ..
திசைத் தெரியாமல் சிதறித் தெறிக்க ..
மண்ணைத்துளைத்து .....
மறுபடியும் பிறப்போம் வா நண்பா ...
விடியலில் ஈழம் உதிக்கும் ...
விடிந்தப்பின் ...
இனவெறியும் ..
சுயநலம் படைத்த அரசியல் கூட்டமும் ..
இந்த விடுதலைத் தனலில்...
புழுவாய்க் கொதிக்கும் ... !
சேகுவரா ...
உறக்கம் கலைத்து ..
உயிர்தெழுந்து வா...!

