( 50 ) விலை மாதர்...(Part 2 )

வண்ண வண்ண விளக்கு இல்லை,
சிவப்பு விளக்கு மட்டும் எரியும்...
ஆடை அணிகலன் அணியவில்லை,
மந்தாரமேனி மட்டும் தெரியும்...

சூரியன் மறைந்தவுடன் வரவேற்பு,
அவன் மீண்டும் உதிபதற்குள் வெளிநடப்பு...

வேடிக்கை பார்க்க வருபவர் இல்லை,
வாடிக்கையாளர் பலர் ஞாபகத்தில் இல்லை...
கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை,
என்ன சொல்ல!!!
வருபவரே தந்துசெல்வர் உபயோகித்ததற்கு விலை...

மகிழவெய்த மனத்ரிப்தி எங்களுக்கு சிறிதுண்டு,
ஏற்கதான் வேண்டும்!!!
நாங்கள் புரிவதும் ஒருவகை சமூக தொண்டு...

'ஒருவனுக்கு ஒருத்தி' இது எங்களுக்கும் தெரியும்,
என்ன கொடுமை!!!
எங்களுடைய விலாசம் போலிசும் அறியும்...

மொத்தத்தில்!!!!
பாலும் பழமும் இருக்காது,
ராகுகாலம் எமகண்டம் தடுக்காது,
பழத்தை மட்டும் பரிக்கது,
சுவைத்து பார்த்தால் கசக்காது...

எழுதியவர் : பாலாஜி (30-Jun-12, 12:50 pm)
பார்வை : 234

மேலே