பொம்மை வாங்கலையோ ..பொம்மை ..!!?
இந்தியக் கல்விக்கூடங்கள் ..
மனித பொம்மைகள் தயாரிக்கும் ..
பணந்தின்னி தொழிற்சாலைகள் ..?!
ஆரம்பவிலை பத்தாயிரம் முதல் ..
இஃது அ,ஆ சொல்லும் ..விலைமலிவு பொம்மை !
A B C ,டாடி மம்மி சொல்லும் பொம்மை ..
இலட்சத்தையும் தாண்டும் ...நாளை
நாடாளபோகும் நட்சத்திர பொம்மை அது ..!
இரண்டரை முதல் இருபத்தைந்து வயதுவரை ..
இங்கே பொம்மைகள் விற்பனைக்கு ..!
விதவிதமான வேலைகள் செய்யும் ..
நீங்கள் சாவி கொடுத்து ஆட்டுவித்தால் ..!
திடிரெனப் பொம்மை பெயரை மட்டும் ..
மறந்துபோயும் கேட்டுவிடாதீர்கள் ...!?
பேந்த பேந்த முழிக்கும் ...
கையில் கிடைக்கும் புத்தகத்தில் ..
வரிவிடாமல் புரட்டிப் பார்க்கும் ..
விடை என்னவென்று ...?
முன்பதிவிற்கு முந்துங்கள் ...
ஆர்டரின் பேரில் ...
உங்கள் முதலுக் கேற்றாற்போல் ...
சொன்னதைச் செய்யும் ..
தலையாட்டி பொம்மைகள் ..
தரமாகச் செய்துத்தரப்படும் ..!
உள்ளூர் ,வெளியூர் ..
மற்றும் வெளிநாட்டு வரிகள் தனி ..
சிறப்புத் தரத்திற்காக ...சிலசமயங்களில்
பிரபஞ்ச சுற்றுலா வரியும் விதிக்கப்படும் ..!
பொம்மை வாங்கலையோ ..பொம்மை ..!!?