நான் பாசம் பேசுகிறேன்

உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது ,
பூமியின் சுழற்சி வேகத்தையும் மிஞ்சுகிறது
உலக மக்களின் ஓட்டம் ,
நாகரீகம் என்னும் மாயப்பேய்
நம் கலாச்சரத்தியும் ஆட்டிவைக்கிறது ,
மனிதம் எவ்வளவோ பெருகி கிடந்தாலும் ,
சில்லறையின் பக்கம் தான் மனிதர் கூட்டம் ,
பணத்துக்காக பொய்யாய் பொழியும்
உறவினர் அன்பு ,
பெற்ற மகளும் , மகளும் , மனைவியும் மிச்சமா ,
காசு கொடுத்தால் மதிக்கும் பொண்டாட்டி ,
ஊர் சுற்ற காசுகொடுத்தால் ஒய்யாரமாய் திரியும்
பிள்ளைகூட்டம்,
நாகரீக கேளிக்கைகளில் சுதந்திரமாய்
போய் விழும் பெண் பிள்ளைகள் கூட்டம் !

துளைந்துபோனத்தை தேடுகிறேன் இன்றுவரை
பாசம் ,
துளைத்தவர்கள் போய்விட்டார்கள் ,
கொடுத்தவன் ஏங்குகிறேன் !

பணப்பசையின் இறுகல் நாளுக்கு நாள் குறைந்துகொண்டேபோக
எந்த சொந்தத்திடமும் , மனிதர்களிடமும்
நான் ஒட்டுவதர்கில்லை!

இருபதுவரை கல்வித்தேடல் ,
இருபதை தாண்டிவிட்டால் காசுத்தேடல்
நூரை தாண்டினாலும் விட்டுவிடாத தேடல் மயக்கம் ,
இல்லாதவர்கள் கண்களுக்கு ஏதோ கொஞ்சம்
தெரிகிறேன் ,
இருப்பவர்கள் கண்களுக்கு ஏனோ தெரிவதில்லை !

புதையலின் தேடலில்
என்னை பூமியில் போட்டு புதைத்துவிட்டார்கள் போலும் ,
உருவம் இல்லாததால்
நான் கல்லறையின் சிறையிலிருந்து தப்பிக்கிறேன்

மனிதனோடு பிறந்த நான் வீதியிலே
மனிதனால் பிறந்த்தது பூஜையிலே ,
செரித்துப்போகும் பணத்துக்கிடையில் ,
செல்லரித்துப்போகிறேன் நானும் !

மனித பிறப்போடு பிறந்த நான் ,
இருக்கும்போதே இறக்கிறேன் ,
பணம் என்கிற பேராசையால் ,
பாசம் நான் செத்துபோகிறேன் !

எழுதியவர் : வினாயகமுருகன் (5-Jul-12, 11:31 pm)
பார்வை : 245

மேலே