வாழ்த்துக்கள் ஜெகதீஸ்வரன்
தாய் தந்தை
தாத்தா பாட்டி
அண்ணன்,அன்னி
தம்பி,தங்கை
தாய்மாமன்,அத்தை
பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி
அக்கா மாமா
மச்சான் மாப்பிள்ளை
அங்காளி பங்காளி
மாமனார் மாமியார்
பொண்ணுகொடுத்தவர்
பொண்ணுஎடுத்தவர் ஒன்னுவிட்ட சொந்தம்
அன்னியின்
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,
பெரியப்பா மகனுடைய
மாமாவுடைய அண்ணனுடைய
மகளுடைய
மாமியாருடைய
கொளுந்தனுடைய
மனைவியுடைய
தம்பியுடைய
அப்பத்தாவுடைய
மூத்த அக்காவுடைய
மச்சானுடைய
பாட்டிக்கு முப்பாட்டன்.
இப்படி எல்லோருடைய
ஆசிர்வாதத்தோடும்
எழுத்து இணையதளத்தில்
இணைந்து வாழும்
அனைத்து தோழர்
தோழிகளின் சார்பாகவும்
இன்று
அப்பா என்ற பதவி
அடைந்த
நண்பர் ஜெகதீஸ்வரனும்
அந்த பதவியை
பெற்றுக்கொடுத்த
அவரின் மனைவியும்
இந்நாள் போன்று
எந்நாளும் பகிர்ந்து
வாழ வாழ்த்துகிறோம்!
அன்புடன்
மணவாசல் நாகா