சைக்கிளும் வாழ்க்கையும்
சைக்கிள் முதலில் ஓட்டுவதற்கு தேவை
தைரியம் ,ஆர்வம்,தன்னம்பிக்கை,விடாமுயற்சி
வாழ்க்கையை வாழ்வதற்கும் தேவை
தைரியம் ,ஆர்வம்,தன்னம்பிக்கை,விடாமுயற்சி
சைக்கிள் ஓட்டும் போது
எத்தனை முறை கீழே வீழ்ந்தாலும் நேராக ஓட்ட
முயற்சி செய்து
கலங்காது முயற்சிப்பவனே வெற்றி பெறுகிறான்
வாழ்க்கையிலும் எத்தனை முறை தோல்வி
வந்தாலும் நேர்வழியில் வாழ முயற்சி செய்து
கலங்காது முயற்சிப்பவனே வெற்றி பெறுகிறான்.
சைக்கிள் முதலில் ஓட்டும் போது பெற்றோர்
துணையை நாடினால் தவறில்லை .
வாழ்க்கை வாழ்வதற்கும் முதலில் பெற்றோர்
துணையை நாடினால் தவறில்லை.
அதுவே இயல்பாகிவிட்டால்?
சொ.நே.அன்புமணி