அவனின் TN 05 V4272

அன்று....
போன மாதம் புக் செய்த புதுக்கார் வந்துநின்றது
வண்டி எண் TN 05 V4272
குடும்பத்தில் குதூகலம் கொப்பளித்தது
குட்டிகள் மகிழ்ச்சியில் தத்தளித்தனர்
இன்பத்தில் உறைந்துப்போய் நிற்கையில்
இனிப்புடன் வந்தாள் மனைவி இருக்கையில்
பிடித்த கார்,,,
பிடித்த நிறம்..
பிடித்த எண்..
நிறைந்த இடம்..
குறைந்த பணம்..
இப்படி
ஆனந்தம் அன்று அவ்வீட்டிலேயே அலுவல் செய்தது
புறப்பட்டான் புதுக்காரில் கோயிலுக்கு
பொங்கிவந்த நன்றி சொல்ல சாமிக்கு
கண்ணிரண்டும் மூடியே கடவுளிடம்
வேண்டினான்
கடவுளே உன் கருணையே கருணை
கேட்டவுடனே செவிமடுத்தாய்
கேள்வியின்றி கார் கொடுத்தாய்
மகிழ்ச்சி பொங்கி வழிகிறது - உன்
புகழ்ச்சி சொல்ல விழைகிறது
கோடி நன்றிகள் உனக்கு இறைவா !
ஊரில் உன் கருணை எடுபடவே - நான்
காரில் உன் பெயரை எழுதிடவே
எழுதினான் காரில் இப்படி வாசகம்
“ கடவுள் தந்த பரிசு இது “
“ கடவுள் கருணையே வடிவானவர் “

ஆண்டவனின் புலம்பல்....

நான் இவனுக்கு
அன்பான அம்மா தந்தேன்
அறிவான அப்பா தந்தேன்
ஆறடி உருவம் தந்தேன்
ஆரோக்கிய உடல் தந்தேன்
ஆதர்ச மனைவி தந்தேன்
அழகியப்பிள்ளைகள் தந்தேன்
ஆதரவாய் அண்ணன் தந்தேன்
அற்புதமான தங்கை தந்தேன்
ஆலமரம் போல உறவுகள் தந்தேன்
அடுக்குமாடி வீடு தந்தேன்
அத்தனைக்கும் மேல்
அமைதியான வாழ்வும் தந்தேன்
இத்தனை தந்தும் எழுதவில்லை என் நாமம்
அத்தனை அளித்தும் அறியவில்லை பாவம்
புரியாமலே போனது என் அருமை
புதுக்காரால் புரிந்தது என் கருணை
என் கருணை எழுதவே இவ்வுலகில் மானிடா
இடமேதும் உள்ளதோ நீ எனக்கு கூறடா ?

எழுதியவர் : வி, வி, குமார் (10-Jul-12, 10:58 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 176

மேலே