இளமையே என்றும் வரலாறு !
அதே காமத்து பால்
கற்பனை வேறு !
தண்ணீர் துளி வேறு
ஆனால் அதே ஆறு !
அதே ஆலமரத்து வேரு
இளைப்பாறும் மனிதர்கள் வேறு!
இனிப்பு பழங்கள் வேறு
ஆனால் சுவை ஒரேவாறு !
காதல் உலகத்தில் ஒரே தேரு
இழுக்கும் கைகள் பலவாறு !
கிராமம் நகரமாய் மாறிய
காட்சி பாரு !
நேற்றைய காதலருக்கு
இன்று முதுமை பாரு !
இன்றைய காதலருக்கு
நாளை முதுமை வரும் பாரு !
காதலர்களை முதுமை
தொடும் பாரு !
ஆனால் காதலுக்கு
இளமையே என்றும் வரலாறு !