தன்னம்பிக்கை = தல..

உன் வளர்ச்சி கண்டு
வாய் பிளந்தவர்களில்
நானும் ஒருத்தன்...
என்னுள் கிளர்ச்சி செய்து
தூள் கிளப்பியவர்களில்
நீயும் ஒருத்தன்...

நல்ல கதைக்காக மட்டுமே
படம் பார்ப்பவன் நான்
உனக்காக என்னைப்
பார்க்க வைத்தவன் நீ

நீ தலைக்கனம் இல்லாத தலை
என்றைக்குமே தாழாதது உன் தலை
உனக்கு நீ மட்டுமே விலை...
உனக்கு மட்டுமே தெரியும்
கண்களால் சிரிக்கும் கலை...

எழுதியவர் : ரா.விஜயகாந்த் (13-Jul-12, 1:17 pm)
சேர்த்தது : zekar
பார்வை : 196

மேலே