விடைதெரியாக் கேள்விகள்!

(முதியோர் இல்லங்களுக்கு சென்றதுண்டா?
சென்றிருந்தால் புரியலாம்)

வாழ்வின் விளிம்புகளில்
வயதைத் தொலைத்து,

பிஞ்சுகளின்
நஞ்சு உள்ளம்
கண்டு கொதித்து,

வெம்பி, வதங்கி,
கிடக்கிற அனுபவக் குப்பைகள்!

ஆம்! குப்பைகள்,

இடைவிடாத காத்திருப்புகள்!
அந்த ஒருநாள் என்று
வரும் என்று! -வந்தால்
வருவார்களா?
இறுதிச்சடங்குகள் முடிப்பதர்க்கேனும்!!!

காணக்கிடைக்குமோ - தம்
கன்றுகளின் தளிர்களை?

கடவுளின் அடிசேரக்
காத்திருப்போர் பட்டியல்
இங்கிருந்தே
தொடங்குகிறது!

யார் முந்துவர்?
யார் பிந்துவார்?
போட்டி இங்கேயும்
நடக்கிறது!

முகத்தின் சுருக்கங்கள்
காலம் உழுதுபோன
சுவடுகள்!

இறப்பை எதிர்பார்க்கும்,
மறுமையை எதிர்க்கும்,
ஏதுமறியா உள்ளங்கள்
இளைப்பாறும் இடம் - இது
முதியோர் இல்லம்!

எழுதியவர் : சரவணா (14-Jul-12, 10:59 am)
பார்வை : 413

மேலே