யாவும் கற்பனையே...
வார்த்தையால்
என் வாழ்வுக்கு
வசந்தகாலத்தை
வரவளைத்தவளே
வறண்டு போன -என்
வாழ்க்கை புத்தகத்துக்கு
உன் வார்த்தைகள் தான்
வசனம் அமைத்துக்கொடுத்தது
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய்
அத்தியாயத்தை -நீ
புரட்டி போட்டபோது நான்
புதுப்பிறப்பெடுத்ததை அறிவாயா..
பாலையாய் காய்ந்து
பழுத்துப்போன என் மனதில்
பரவசமாய் நீ பிரசவித்த வார்த்தைகள்தான்
பூச்சொரிந்தது
என் சந்தோசபுத்தகத்தில் இறுதி அத்தியாயத்தை
இரவோடு இரவாக எழுதி முடித்த நீ
இறுதியில்
"யாவும் கற்பனையே "
என்பதைமட்டும்
ஏனடி என் இரத்தத்தை தொட்டு எழுதினாய் ....?