தாஜ் மகால்

முன்னொரு காலத்தில்
முகமதியர் என்றோர்
அழையாத விருந்தினர்
ஆக்கிரமித்தனர் இந்தியாவை
அவர்களில்
பொன்னும் பொருளும் மட்டும்
போதுமென ,
அள்ளிச்சென்றோர் சிலர்
மன்னும் வேண்டுமென
மகுடம் சூடினோர் பலர்
மகுடம் தரித்த
மன்னர்களின்
வழி வந்தவர்கள்
விட்டுசென்ற
சான்றுகள் சில
இச்சான்றுகளில்
எல்லாம் எப்படியோ
எனக்கு தெரியாது
ஆனால்
ஆக்ராவை
ஆக்கிரமித்திருக்கும்
யதார்த்த காதலின்
உண்மைச்சின்னம்
யமுனை நதிக்கரையில்
கம்பீரமாய்
மிளிர்ந்து கொண்டிருப்பதை
காண்கையில்
அவர்கள்
அள்ளிச்சென்ற
பொன்னும் பொருளும்
பொருட்டாய் படவில்லை எனக்கு !

எழுதியவர் : thila (16-Jul-12, 8:56 pm)
சேர்த்தது : Thila
பார்வை : 228

மேலே