மழை
அன்னைக்கு ஒரு நாள்
ஆலங்கட்டி மழை பேஞ்சுச்சு
அம்மா திட்ட திட்ட
வெள்ள எலந்தப்பழம் கணக்கா
கொட்டிக்கிடந்த பனிக்கட்டிய
ஆவலாய் பொருக்கி
விளையாண்ட காலம் அது
இன்னிக்கு நெனச்சாலும் முடியாது,
அம்மாவா நானிருந்து
மழையில நனையக்கூடாதுன்னு
வீட்டுக்குள்ள உக்காத்திவெச்சு
புள்ளைக்கி
புத்திசொல்லி குடுக்கிறதால