போதை போடும் பேனாக்கள்
கவியரசே! நீ
போதைபோட்டு
எழுதினாலும்
உன் எழுத்துக்கள்
தள்ளாடவில்லை!
காரிகைகளுடன்
குலாவினாலும்
உன் கவிதைகளில்
விரசமில்லை!
போலி உலகில்
பாட்டு எழுதினாலும்
உன் பாடல்களில்
நிஜம இருந்தது
இன்றோ
எழுதுபவர்கள்
பேனாக்களில்
விஸ்க்கியும்
பிராண்டியும்
கலந்து ஊத்தி
எழுதுகிறார்களோ?
எழுத்துக்கள் எல்லாம்
எழுந்து நடக்க முடியாமல்
தடுமாறுகின்றன
கவிதைகள்
விரசத்தில்
விளையாடுகின்றன
பாடல்கள் எல்லாம்
பாதை மாறி
நிஜத்தை நழுவ விட்டு
அம்மணமாய்
அலைகின்றன