ஒட்டு சாதி

மூன்றில்
அப்பாவின் முண்டாப்பனியனில்
என் முழு உடல்
-சிரித்தார்கள் எல்லோரும்

பத்தில்
அம்மாவின் ஒற்றைச்செருப்பில்
என் இரு கால்கள்
-மகிழ்ந்தார்கள்

இருபதில்
அப்பாவின் எழுத்துப்போல்
என் படைப்புகள்
-வியந்தார்கள்

முப்பதில்
அம்மாவின் காதல் போல்
ஜான்சனுடன் நான்
-வெறுக்கிறார்கள்

என்
அப்பா அனந்தராமன்
அம்மா ஆயிஷா பேகம்

கூடாதாம்
நான் மட்டும்
ஜான்சனுடன்

பரந்தாமன்-பபீதா
மகன்
என் சாதியாம்......

வெறுக்கிறேன்
எல்லோரையும்

எழுதியவர் : அகன் (26-Jul-12, 7:06 pm)
Tanglish : ottu saathi
பார்வை : 173

மேலே