வானவில்

வான்வெளியில்
விண்ணரசர்களின்
திருமணத்திற்கமைத்த
வண்ண வளைவு.
எப்பொழுதும்
நீல ஆடை கட்டிச் சலித்த
வானமகள்
அணிந்து அழகுபார்க்கும்
வண்ணச் சேலை.
விண்வெளியில்
வான்கோள்களின்
போக்குவரத்து நெரிசல்
தீர்க்க
கடவுள் அமைத்த
மேம்பாலம்.
-பாரதிகண்ணம்மா