கருவறைக்குள் கல்லறை

விதைக்க படுவதற்கு முன்பே
புதைக்க படும் பூச்செடிகள்
பற்றிய
கல்லறை குமரல்களின்
கடைசி வரிகள் -இந்த கவிதை
பெண் சிசு கொலைகளுக்காக....
*******************கருவறைக்குள் கல்லறை******************
ஆயிரம் ஆயிரம் கனவுகளை
சுமந்த படி
லெட்ச கணக்கான
விந்துக்களுடன் போராட்டம் நடத்தி
வெற்றி இலக்கை அடைந்து
கர்பத்திலே கருவரக்கப்பட்ட
கன்னி பெண்கள் நாங்கள்....
ஈருடல்,ஈருயிர்
இரு இதயம்,இரு மூளை ,நான்கு கண்கள்
நன்றாகதனே நானும்
உன்னுள்ளே இருந்தேனம்மா....
என் சுமை தாங்கலையோ?
எட்டி உதைத்த வினை பயனோ ?
என் முகம் பார்க்கும் முன்னே
ஏனிந்த தீச்சயலோ ???
ஏட்டறிவு பெற்றோரும் (மருத்துவர்)
என்னை பெற்றோரும் (அப்பா,அம்மா)
செயற்கையால்
இயற்கையை இறக்க செய்த
இன்னல்கள் நீங்கலையே ???
என்ன பாவம் செய்தோனோ
எப்படி நான்
கருவறுக்க....
எட்டி உலகம்
பார்க்கும் முன்னே
ஏனிந்த ஏமாற்றோமோ???
ஆணாக பிரக்கலையோ ?
அடி நெஞ்சு தாங்கலையோ?
பெண்ணாக பிறப்பேனென்று
கனவிலும் நினக்கலையோ?
இல்லை ஒரு பிள்ளையென
தவமிருக்கும் தாய்மடி
சேரலையோ?
அப்பாவிடமும்,உற்றாரிடமும்
போய் சொல்
விதைக்க படுவதற்கு முன்பே
புதைக்க படும் பூச்செடிகள்
நாங்கள் என்று....
குறிப்பு: உங்கள் ஆசைக்கும்,ஆஸ்திக்கும்
அடயாளம் நாங்கள்.ஆஸ்பத்திருக்கு அல்ல....
இறந்து போன
பல ஆயிர உயிர்களின்
அக்னி மழைதுளிகளுடன்
பரமகுரு க