அவளுக்கான என் முற்றுபுள்ளி ...

தாய் தந்தையின் வசமாகி மற்றும் சில பிரச்சனைகளுள் பிரிந்த காதலனை மறுபடி பார்க்கும்போது பெண் பயம் கொள்கிறாள் அதை கண்டுகொண்டவன் அவளை கானது திரும்புகிறான் . உண்மையாக காதலித்தவள் பிரிந்தால் அந்த பிரிவுக்கு பின் அவன் அடைந்த வேதனைகளை சொல்லும் எழுத்துக்கள் இவை .

என்ன நினைத்தாயோ
எப்படி சொல்வேன்
நீ விட்டு சென்ற
நாட்களின்
தனிமையேய்..

நெஞ்சில் நினைவுகளை
சுமந்துகொண்டு
அழும்போது ஆற்றுவெல்லமாய்
எழும்போது
இறக்கை சிதைந்த
பறவையாக நானும்
துடித்ததை

தரையில் இருந்தும்
மண்ணுக்கடியில்
மனதை புதைத்துவிட்டு
மனநோயாளியாக அலைந்த
அந்த நாட்கள்

உன்னை வேண்டி
சிலர் கால்களை
தழுவிய
என் கரங்கள் இதுவரை
அழுக்காகதான் இருக்கிறது

மூச்சிவிடவும்
சிரமமாய் இருந்த
அந்த நாட்கள் என்னவென்று
சொல்வது .
நரகம் என்பதை தவிர .

என் தனி அறை
கண்ணீரால்
நனைந்ததை
யார் அறிவார்
தலைகனையேய் தவிர

வலிக்கின்ற போதும்
சிரித்தேன் நானும்
முகமூடியாய் மாறியது
முகம்

இரவில் விழித்திருக்கும்
ஆந்தையாய் மாறி போனேன்
வார்த்தைகளின்றி
மௌனம் சேர்கையில்
உன் பெயரை சொல்லி
தனிமையில் அழுதேன்

இரக்கமற்றவன் என்று
நினைத்திருப்பாய்
உண்மைதான்
உன்னை நேசித்ததாலே
சுயநலமானேன்
உயிரையும் மதிக்காமல்
வெளியேற்ற துணிந்தேன்
நெருப்பாய் நடப்பதை விட
காற்றாய் மிதக்கலாமென்று

என்னை செதுக்கும்
முயற்சியில்
தினம் தினம் தோற்று போனேன்
உளியாய் உன்
நினைவுகள்
ஓயாமல் தட்டி கொண்டேன்
என்னை நானே
வாழ்வதை விட
உனக்கு முன்னால்
வாழ வேண்டுமென
எண்ணி கொண்டேன்

திட்டி தீர்த்து கொள்
சாபம் இருந்தாலும்
ஏற்று கொள்கிறேன்
மறு பிறவி எடுக்கும்
எண்ணம் எனக்கில்லை
நரகத்தில் இறங்க
பயமும் இல்லை
பழகிவிட்டது

நீ இல்லாமல் நான்
என்ன செய்வேன்
என்று எண்ணி இருந்தால்
இத்தனை துயரம் எனக்கில்லை
உன்னை மட்டுமே நீ
நேசித்தாயோ
காலம் எனக்கான
மருந்தை
கொடுத்துவிட்டது
மனதில் நீ இல்லை
அதனால் வலியும் இல்லை
உயிரின் உன்னதம்
புரிந்தது தெளிவானேன்

உனக்காக நான்
ஏறிய படிகளில்
என்னை எட்டி உதைத்ததை
தவிர உன் பங்கு
ஒன்றும் இல்லை
நேர்மையாய்த்தான்
இருந்தேன்
விட்டுவிடும் எண்ணம் இல்லை
கடைசிவரை

பயத்திற்கு எப்போதும்
நான் முற்று புள்ளி வைப்பதுண்டு
அது போலதான்
உனக்கான என் பயத்திற்கு
இதோ என் முற்று புள்ளி .

எழுதியவர் : jagadeeshwaran (2-Aug-12, 7:59 pm)
பார்வை : 301

மேலே