காத்லித்துப்பர் !

நோயாளி வந்தால்தானே
மருத்துவருக்கு வேலை!
இருள் என்பது வந்தால்தானே
ஒளிக்கு அங்கே நல்ல வேலை!
பூமி சுற்றினால்தானே இரவும்,பகலும் மாறிப்படும்!
நிற்க ,
காதல் வந்தால்தானே
கவிதைகளும் சேர்ந்து வரும்!
ஆகவே , காதலித்துப்பார்!
உனை ஓர் கவிங்கனாய் ,நல்ல கலைங்கனாய்
உலகம் பார்க்கும்!
உறுதிகொண்டு வாழ்வில் போராடு,
புதியதொரு சிகரம் தொடு!
ஆகவே நீயும் காதலித்துப்பார்!
கனவுகள் வருமோ இல்லையோ
கவிதைகள் நிச்சயம் வரும்!
பிறக்கும் போதும் நமக்கு அழுகைதான் !
இறக்கும் போதும் நமக்கு அழுகைதான் !
இடையில் தானே கொஞ்சம் மகிழ்ச்சி!
அதிலும் ஏன் வேண்டும் வறட்சி?
ஆகவே,காதலித்துப்பார் !
ஆயிரம் மலர்கள் உன் மனதில் பூத்து குலுங்கும்!
ஆண்டுகள் கூட நிமிடமாய் மாறிவிடும்.
ஆகவே ,நீயும் ஒருமுறை காதலித்துப்பார்!
ஜன்னல் வழி ஜாடை அவள் காட்டினால்,
உன் இதயமெனும் உலகையே
அவளுக்கென நீ திறந்து வைப்பாய்!
அவள் இருக்கும் தெருவை பார்க்கும்போதும்
அவளை பார்த்த திருப்தி உனக்கு வரும்!
அவள் பின்னே நடந்து சென்றால்
சாலையின் அகலம் குறைந்து மூன்று அடியாக
ஆகாதோ என்று தோன்றும்!
ஆகவே ,நீயும் காதலித்துப்பார்!