கொள்கையோடு வாழ்கிறோம்!
சாதி மறுப்பு.....
அரசின் கொள்கை!
சாதி அடிப்படையில்
இட ஒதுக்கீடு....
அரசின் சட்டம்!
"ஒன்றே குலம்...
ஒருவனே தேவன்"...
அரசின் கொள்கை!
இட ஒதுக்கீட்டில்
சிறப்பு உள் ஒதுக்கீடு...
அரசின் சட்டம்!
அரசின் எல்லாக் கொள்கைகளும்
இப்படித்தான் ....
எப்படியோ...
சட்டங்களால் முறியடிக்கப் பட்டு
விடுகின்றன.
இப்படித்தான் ....
கொள்கைகளுடனே வாழும்
எங்களின் தலைவர்களை
கறுப்புச் சட்டங்கள்
தோற்கடித்துவிட...
நாங்கள் வேறு..வேறு..
கொள்கைகளை உடைய...
வேறு..வேறு தலைவர்களைத்
தேர்ந்தெடுக்கிறோம்.
அநியாயமாய்...
அவர்களும் சட்டங்களால்
தோற்கடிக்கப்பட்டுவிட...
என்றாவது ஒருநாள்...
சட்டங்களைக் கொள்கைகள்
ஜெயித்துவிடும்...
என்னும் அசாத்திய நம்பிக்கையில்
ஒவ்வொரு தேர்தலிலும்...
ஒவ்வொரு கொள்கையை...
வெற்றி பெறச் செய்து
தோற்றுக் கொண்டிருக்கிறோம்...
நாங்கள்.