காதலும், கைபேசியும்...!
![](https://eluthu.com/images/loading.gif)
என் கையும், கைபேசியும்
முத்தமிட்டுக்கொள்கையில்
உன் கைபேசியில்
கால் பிறக்கும் !
பல கால்கள் சேர்ந்து ஊர்ந்து
நம் காதலை வளர்க்கும் !
கால் கடுக்க காக்கவைக்கபடுவோம்..
கை, கால் எடுப்பது பற்றி
உன் அப்பா பேசும்வரை
நீளும் நம் காதல் !
கடைசியாய்....
கால் கட்டொன்று
என் கை வலிக்க
துவைக்கவைத்துவிடும்
உன் புடவைகளை .....!
உன் அழுக்குப் புடவைகள்கூட
என்னிடம் வழுக்கிப் போவது கண்டு,
சிரித்தும் ரசித்தும்
மகிழ்கிறாய் நீ !
நெகிழ்கிறேன் நான் !