குரு வணக்கம் !
கல்வி எனும் நதியினிலே
நாம் நீந்திச்சென்று
அக்கரை சேர ,
தினம் ஒரு வியூகம் வகுக்கும் சாணக்யர்களே !
நாம் சிகரம் ஒன்றை தொட
எந்நாளும் ஓரிடம் நின்று
எம் சுமைதனை தாங்கி உயரம் ஏற்றும்
ஏணிப்படிகளே !
நினை மேலும் வாழ்த்த வயதில்லை !
மாறாய் என்றும் வணங்குகிறேன் !