முத்த ஓவியம்!

எச்சில் எனும் மை கொண்டு
வரைந்தேன்;
முத்தம் எனும் ஓவியத்தை...!
என் உதடுகளால்
உயிர் கொண்ட
உன் உருவம்.....
உதடு முழுவதும்
உன் செல்களின் சுவடுகள்.....!
உன் ஒவ்வொரு செல்களிலும்
என் உதட்டின் ரேகைகள்....!
எனது முத்தச்சுவடு
காய்ந்து விடக்கூடாதென
காத்தாடியின் இறக்கைகளை
கண்களால் கட்டுப்படுதிவிட்டாய்....!
எனது இரண்டாம் முத்தத்தின்
மூச்சுக்காற்றிலேயே
முதல் முத்தம்
பலியாகிவிடுகிறது அறியாது...!
உன் காதல்......

எழுதியவர் : இரா.வித்யாதரன் (6-Aug-12, 3:26 pm)
பார்வை : 174

மேலே