ஆதங்கம் !
புதுப்பிக்கிறேன் எனை ஒவ்வொருநாளும்
புதிய அனுபவம் தேடி !
மக்கி கிடந்த அறிவை
மீண்டும் தீட்டுகிறேன் நுட்பமாக .....
கல்வி கற்றதோடு நிற்காமல் , நல்ல
கலைங்கனாய் ,கவிங்கனாய் மாறி ,
சமூக விழிப்புணர்வு எதில் வேண்டும் ?என்பதை
எழுத்து மூலம் வெளியாக்க
எழுந்து உலாவுகிறேன் !
வாழ்த்துங்கள் ! இனைந்து புதியதோர் உலகு செய்வோம்!
நீரூற்றுங்கள் நான் வளர ,தகுந்த அறிவுரையால் .
நான் என்று சொல்வதை விட்டு இனி
"நாம்" என்று சொல்வோம் !
நலமுடன் வாழ்வோம் !