நம்நாடு
இரவில் கிடைத்த சுதந்திரத்தை
இரவானாலும் படித்தே முடிக்க,
விழித்தேன் படிக்க....
அடிமைப் போராட்டத்தில்
வேதனைகள் வெடிக்க,
இடையில் விழித்த என்னறிவு
பிடிமூளை யொன்றைப் படைக்க,
உடன்உத்தரவிட்டது படம்பிடிக்க....
அடிமைப் போராட்டத்தில்
வேதனைகள் வெடிக்க
வீரர்கரம் துடிக்க
உடன் வீரர்கள்பலர் தோள்கொடுக்க
விடாஎழுச்சிகள் பல
அணிவகுத்துப் படையெடுக்க
இறுதியாய்,
மூடிய ஏற்றக்கதவுகள்
வெடித்து வழிகொடுக்க,
விடிந்தான் சூரியன் இரவில்!
உடன்விளித்தான் சுதந்திரம் போர்க்கடலில்!
அன்று,
மகிழ்ந்தார் சுதந்திரவீரர்கள்;
உடன்உரைத்தார்கள் உறுதிமொழியை,
உயிர்கள்பல வீழ்ந்த இம்மண்ணில்,
உரமோடு நாளை நம்மன்னர்கள்,
சுவாசிக்கட்டும் சுதந்திரக்காற்றை...
நினைக்கட்டும் நேற்றையநாளை...
நேசிக்கட்டும் சுதந்திர பாரதத்தாயை...
காக்கட்டும் தேசத்தின் வளங்களை...
நீதிதவறாது, வாழட்டும்...வாழட்டும்...
நீடூடி வாழட்டும்....
ஒருபுறம்,
போராட்டம்கண்ட நினைவுகளோடு
மனம் கவிதைப் பாடிட...
மறுபுறம்,
வேறுபாட்டை விளக்க,
வேவுபணிகண்ட பிடிமூளை
சுதந்திரத்திற்குப் பின்னுள்ளநிலையை கண்முன் திரையிட,
இதோ உங்கள் பார்வைக்கும்....
''பின்மறைத்த சுயநலம் மேலோங்கி,
ஒற்றுமையை உடைத்துவாழ்தல் முறையோ!
தனித்து-தனித்து வாழும்நிலை தொடர்ந்து,
அரசியல்ஓநாய்களுக்கு தானாகமுன்வந்து இரையாதல் சரியோ!
மேலும்,
கிடைத்த சுதந்திரத்தை வாக்குச்சாவடியில் விற்று,
மீண்டும் அடிமையாதல்தான் உச்சக்கட்டநிலையோ!
இறுதியாய்,
சுதந்திரம் கொடுத்தவன் முகத்திலேயே
உமிழாததுதான் குறையோ!''
இன்றைய நிலையெண்ணி
நிலைமாறிய என்மனதில்,
சுதந்திரம் கொடுத்தவனுக்கு
சிலகாலம் உயிர்கொடுத்து
இங்குலவவிட்டால்,
என்ன சொல்வானின்று,....
அன்று,
ஆண்டுகள் பல
அடிமைப்பட்டு,
வீரர்கள் பலர்
உயிரைக் கொடுத்து,
எழுச்சிகள் பல
ஏற்றம் கொடுத்து,
இறுதில்,
இரவில் ஏற்றிவிட்டோம்,
சுதந்திரக்கொடியை;
உடன் அறியாதும் விளித்தும்விட்டோம்,
என் நாடு சுதந்திரநாடென.....
இன்று,
பாவிகள் வாழ்வதற்கா...
நல்லாவிகள் பரிசளித்தோம்!
பின்துரோகிகள் இருப்பதறியாது,
சுதந்திரச்சூரியனையும் படைத்துவிட்டோம்!
ஐயோ! தவறு செய்துவிட்டோமே, என அவன் வருந்துவான்.
- A. பிரேம் குமார்
குறிப்புகள்:
1. ''பிடிமூளை'' - பெருமூளை, சிறுமூளை பணிசெய்துக்கொண்டிருந்தபோது, படிக்கும்போது, ஒரேசமயம் வேறுபாட்டையும் குறிப்பெடுக்க, படைக்கப்பட்டது, ''பிடிமூளை''.
2. படைப்பில், ''உரமோடு நாளை நம்மன்னர்கள்'' - இதில் ''நம்மன்னர்கள்'' என்பதற்கு அர்த்தம்; ''மன்னர்கள்'' என்றால் மன்னர்கள் என்று அர்த்தமல்ல, ''மக்கள்தான் மன்னர்கள்'' என்று பொருள்.
இறுதியாய் சொல்ல நினைப்பது, இன்றைய நிலைக்கு, மக்கள்தான் காரணமே தவிர, அரசியல்வாதியையே குறைசொல்ல முடியாது. மக்களுக்கு, சுயநலம் பெரிதாகி, ஒற்றுமையை உடைத்து விட்டனர், இதனை, அரசியல்வாதி பயன்படுத்திக்கொண்டான்.