நாம் கடை பிடிப்போமே
மன்னிக்கும் குணம்
மனிதனுக்கு மட்டுமே!
மனித நேயத்தை
செயல் வடிவில் காட்டுதல்
சுயநலம் விடுதல்
தான் என்னும் அகந்தையை அறுத்தல்
கடமையில் தவறாமையே !
மனித மனம் காணல்
பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல்
அடுத்தவர்க்கு உதவுதல்
ஒற்றுமையுடன் செயல்படுதலே !
இவை அனைத்தும் சாதுவான
பிராணிகள் எங்கேயும் கற்றுத் தெரிந்து
கொள்ளவிலையே !
ஏனிந்த மாற்றம்
மனிதனுக்கு மட்டுமே !
நமக்கு முன்னோர்கள்
சான்றோர்கள் கற்றுத் தந்தவை
நாம் கடை பிடிப்போமே
என்றென்றும்!
விட்டில் பூச்சியாய்
விளக்குச் சுடர்களுக்கு
இரையாவதை விட...
தூண்டும் தீப் பொறியாய்
பொது நல ஆர்வம்
கொள்வோமே!
மனித நேயத்தைத் திரியாக்கி
அன்பினை நெய்யாக்கி
விடியல் எனும் தீபங்களை
ஏற்றிடுவோமே !