தட்டுங்கள் திறக்கப்படும்

தட்டுங்கள் திறக்கப்படும்
ஏசுபிரான் சொன்னார் !
தவறாக புரிந்துகொண்ட
தனயன்
வங்கி லாக்கரை
தட்டினான் .
திறந்தது !
கூடவே
அபாய அலாரம்
அடித்தது !
இப்போது அவனை
போலிஸ் லத்தி
தட்டுகிறது !
சிறை கதவாவது
திறக்குமா ?
தட்டி பார்கிறான்
திறக்காது !
அவன் திருந்தாதவரை !

எழுதியவர் : (11-Aug-12, 9:47 am)
சேர்த்தது : m arun
பார்வை : 154

மேலே