ரௌத்ரம்

வேத கால சரித்தரம்
பாரம்பரிய பாரதம்
அண்டம் போற்றும் புனிதம்
இருந்தும் வீழ்ந்தோம்

வெள்ளையன் தந்திரம்
மறந்துபோன ரௌத்ரம்
கொண்டு வந்தது அடிமை தரித்திரம்

அஹிம்சை தாரகமந்திரம்
பல உயிர் தியாகம்
மீண்டது சுதந்திரம்
சும்மா வரவில்லை சுதந்திரம்

உயிர் கொடுத்து, உடமை தொலைத்து
மீட்கப்பட்ட சுதந்திரம்
ஊட்டி வளர்த்த ஊழல் சமுத்ரம்
இதில் நம் சுதந்திரம்
மெல்ல மூழ்கும் முகாந்தரம்

மீண்டும் வருமோ
அஹிம்சை ரௌத்ரம்!

எழுதியவர் : வியாசன் (15-Aug-12, 6:01 pm)
சேர்த்தது : vyasan
பார்வை : 156

மேலே