மகாத்மாவே மண்ணுக்கு வாருங்கள்
காந்தி சிலையோரம்
கவலையோடுக்
கண்ணயர்ந்தேன்
கனவில் காந்தி வந்தார்
காலடித் தொட்டு வணங்கினேன்
கைத் தூக்கி விட்டு நலம் விசாரித்தார்
என்னையல்ல - இந்தியாவை
கண்ணீர் சிந்தினேன்
காந்திமஹானே
கடவுளாய் இந்தியாவில் வந்தவரே
கண் கூடாய் கண்டதைக்
கனவிலேனும் கேளுங்கள்.
நிலவைத் திருடிய இரவைப்போல் - எங்கள்
நிம்மதியைத் திருடிக் கொண்டிருக்கின்றார்கள்.
கருக் கலைந்தத் தாயைப் போல
உருக்குலையும் இந்தியாவை
உருவாக்கிகொண்டிருக்கிறார்கள்
உன்னோடு உத்தமர்கள் ஜாதிபகுபடின்றி
உழைத்தார்கள் - இன்றோ
எத்தர்கள் ஜாதிபாகுபட்டில் பிரிந்து
எட்டிக்காயாய் முளைத்து வருகின்றார்கள்
தேசியக் கொடிக்காக
கோடி மக்களை கூடி அழைத்து
சுதந்திரத்தைத் தேடிவைத்தாய்.
கூடி வாழ்ந்த மக்களெல்லாம் - இன்று
கூரையைப் பிரித்தப் புயலைப்போல்
ஜாதிப் புயலில் ஒதுங்கி வாழ்கிறார்கள்
புயல், படகை கரை சேர்த்ததுண்டா?
விவேகத்தைக் காட்டிலும் - வீரப்பனும், பிரபாகரனும் வீரனாக வளர்ந்துவிட்டார்கள்
காடு வளர்ப்போம் என்று - நாடு முழுக்க
நடைமுறைப்படுதியதற்கு
நல்ல காரணம் அறிந்தோம்
லஞ்சம் - இதை நீர் வாங்கியதுண்டோ?-அல்லது
வளர்த்ததுண்டோ? - பின்
எப்படி இது வளர்ந்தது? - ஓ
எட்டப்பனை தேசியத் தலைவனாகக்
கொண்டால் பல எட்டப்பர்கள் உருவாகித்தான்
வந்தார்கள். - அதனால்தான்
இந்தியாவின் நலம்
இறுகித்தான் இருக்கிறது
தேசம் விடுபட அரணாக நின்ற அண்ணலே
15 ஆகஸ்ட். அக்டோபர் இரண்டில் மட்டும்
அகமகிழ்ந்து ஆரவாரம் செய்வோம்
அடுத்தநாள்
அரசியல் தந்திரத்தால்
ஆடிப்போவோம்
சுயநலம் இல்லாமலேயே
சுதந்திரத்தைத் தந்தவரே
யாரிடம் சுதந்திரத்தை
ஒப்படைத்து சென்றீர்
உமக்குப்பின்னால் - உருவானவர்கள்
உருவாகிவருகின்றவர்கள் உத்தமனாக
உருவாவதிலையே - நேர்மையற்றவர்களால்
நிமிர்ந்து வாழமுடியவில்லையே.
சட்டப்படி உருவாக்கிய சட்டத்தால்
சட்டப்படி செய்யாமல் - சதி
திட்டத்தால் அல்லவா இத் தேசத்தை
மட்டம் தட்டி வாழ்கின்றாகள்
பாவம் செய்யும் மக்கள் கட்சி ஒன்று - பாரதத்தைப்
புன்னாக்கிகொண்டிருக்கிறது
கடத்தல்காரர்களும், கொள்ளைக்காரர்களும்
கண்ணியவாங்களாக திரிந்து வருகின்றார்கள்
ஜனவரி இருபத்தியாரிலும் தேசியக் கொடி
புதியப் பொலிவுடன் புன்னகைக்கும்
சுதந்திர பதியம் போட்ட தேசத்தில்
புதியக் கொடிகள் பறக்கிறது - அரியணை
ஏறுவதற்காக - அரைஞான் கயிறுக்கூட - இங்கே
அவிழ்க்கப்படுகிறது - விடுதலைப் பல்லவியை நீர் விளங்கவைத்து - தேசமக்களை விழிக்க வைத்தாய்
விழித்த மக்களை உறங்கவைக்கவே - தேச சுதந்திர வசந்தத்தை வாங்கிக்கொள்கிறார்கள்
ரகசியங்கள் - ஆலோசனையின் பேரில்
ரகசியமாய் அடிக்கடி அரங்கேற்றப்படுகிறது.
அடுத்தவனை வாழ வைக்க நீர் அவதரித்தீர்
நாங்கள் கண்ட தேசத்தில் -
அடுத்தவனை அழ வைக்க பல
அவதாரங்கள் தோன்றித்தான் வருகின்றன.
தேசத்தின்
பொது சொத்தைப் பேணிக்காக்க நீர் போராடினீர்
பொது சொத்தை அழித்தாவது
புது சொத்தை வாங்க பல சொத்தைகள்
அழிவுவேலையை செய்கின்றன
மகாத்மாவே மண்ணுக்கு வாருங்கள் - என்று
மனதார உம்மை அழைக்கமாட்டேன்
கண்ணுக்குள் வந்தீரே அதுவேப் போதும்
எந்தத் தாயின் கற்பத்திலாவது தோன்றப் போகிறீர்கள் - வேண்டவே வேண்டாம்
நீர் இருந்தவரை எங்கள் தாகம் தணிந்தது
இனி - அரசியல்வாதிகளிடம் இருப்பது
பதவி தாகம் - உம்மால் தீர்க்கவே முடியாது
தீர்க்கமானவரே என்றுமே - எங்களுக்கு
தேசப் பிதவாகவே இருங்கள் -
தேடி வந்து விடாதீர்கள்.