NINAIVUGALIL NEE
நினைவுகளில் நீ
______________________________________________________
நரம்புகளில் நினைவுகளால்
நாட்டியம் ஆடுகிறாய்
நெருங்கி பார்க்கவும்
பழகவும் இல்லை என்றாலும்
நெருங்கியது போல்
நெஞ்சத்தை நெருடுகிறாய்
காதலித்தால்
கவிதை வரும் என்றார்கள்
உன்னை காதலித்தேன்
நீயே
கவிதையாய் வந்தாய்
கல்லும் கண்ணீர்
வடித்தது
உன்னை ஆங்கிலம்
அடிமையாய் வைத்திருந்ததன்
அர்த்தம் புரியாமல்
அது கூட பெருமைதான்
வயதில் மூத்த
உன்னை
வாத்தியாராய் ஏற்று
நெடுங்காலம்
வாழ்வது எப்படி
என கற்று தேர்ந்தது............!
எனக்கு முன்
பிறந்ததால் சகோதரன்
என்பேனா?
என்னிடமிருந்து
பிறந்ததால் குழந்தை
என்பேனா ?
அரசியல் பொய்யர்கள்
கூட சொன்னது
மறப்பார்கள் ............
உன்னை
எப்படி மறக்க..............?
என் நினைவுகளில்
என்றும் நீ இருப்பதால் ...........
-------கவி பிரியன்