நோன்பின் மாண்பு

படைத்தவன் ஒருவனை
படைப்புகள் போற்றிட
வந்தது வந்தது நோன்பு !
அது தந்தது தந்தது மாண்பு!

இறைமறை வேதத்தை
இரவெல்லாம் ஓதிட
வந்தது வந்தது நோன்பு !
அது தந்தது தந்தது மாண்பு!
(படைத்தவன்)

அல்லாஹ்வின் அருட்கொடை
எல்லார்க்கும் கிடைத்திட
வழிவகை செய்யும் நோன்பு!

அன்றாடம் தொழுதிட
அல்லாஹ்வை புகழ்ந்திட
புண்ணியம் தருவது நோன்பு!

நோன்பினை முறையாய்
நோற்றிடுவீர்
நோய்நொடி இன்றி
வாழ்ந்திடுவீர்
இறைவனின் அருமையை
புகழ்ந்திடுவீர்
அதை அறியாதார்க்கும்
புகட்டிடுவீர்!
(படைத்தவன்)

பசித்தவன் பாடினை
புசித்தவன் புரிந்திட
இறைவன் கொடுத்ததொரு தீர்ப்பு,
அது ரமலான் மாதத்தின் நோன்பு!

ஏழை எளியோரின்
வாட்டம் போக்கிடவே
இறைமறை கூறும் சிறப்பு,
அது ஜகாத் செய்திடும் சிறப்பு!

அனுதினம் இறைவனை
வணங்கிடுங்கள்,
அவன் அருள் பெறவே
தினம் முயன்றிடுங்கள்!

கண்ணியம் காத்திடும்
இஸ்லாத்தை,
கண்ணிரண்டாய்
காத்திடுங்கள்! (படைத்தவன்)

எழுதியவர் : யாசர் அரபாத் (19-Aug-12, 12:52 pm)
பார்வை : 259

மேலே