என் தோழி

பள்ளியில் உடன் படித்த தோழியின் நினைவில் எழுதியது.

தடுக்க ஆளில்லாமல் ஓடிகொண்டிருந்தேன் காட்டில் ஓர் ஆறாக
தடுத்து நிறுத்தி தட்டிகொடுத்து நின்றாய் ஒரு மரத்தின் வேராக
அன்று வரை அறிய முயன்றதில்லை நான் நட்பின் அழகை
சேர்ந்து வந்தாய் ஒரு உடன் பிறப்பைப் போல
சோதனைகளை கடக்கும் போது தாங்கிக்கொண்டாய் ஒரு தாயை போல.

நடந்த பாதைகள் இன்றும் என் நெஞ்சை நெருடுகின்றது.
உன் ஞாபகங்கள் மனதில் இளந்தென்றலை போல வருடுகின்றது.
அங்கிருந்த கல்லும் கூட சொல்லும் காலம் உள்ளவரை நம் நட்பை
பேசிய வார்த்தைகளும், சிந்திய கண்ணீரும் கொட்டிய புன்னகையும்
காதுகளில் கேளாமல்தான் போய்விடுமா?
நீயும்தான் அதை கேட்டிருபை இன்றும் கூட..

மழை துளியானது வானைவிட்டு புறப்பட்டபின்
மண்ணை வந்து சேராமல் போகாது
அந்த மழையை நான் காணும் நாளெல்லாம்
உன் நினைவுகள் என் உள்ளத்தில் உரையாடாமல் மறையாது.
காலம் நகரும் வேகத்தில் என்னை சந்திக்க நேரமில்லாமல் போகலாம் உனக்கு
ஆனால் ஓர் நாளும் உன்னை பற்றி சிந்திக்காமல்
நகர்ந்ததில்லை நாட்கள் எனக்கு.

பேரும், புகழும், செல்வமும் பெற்று நீ
சாதிக்கும் நாள் வரும்
உன் சொந்தமும் பந்தமும் இன்பத்தை உனக்கு
அள்ளி தரும்
அன்று நான் இவ்வுலகில் இல்லாமல் போகலாம்.
ஆனால் என்றும் என் ஆசிகள் உன்னோடு இல்லாமல் போகுமா?
காற்றோடு கலந்தாலும் சுற்றித்தான் வருவேன்
என்றும் உன்னை
நம் நட்போடு ; நெஞ்சில் உன் நினைவோடு.

எழுதியவர் : Shravanyaa (23-Aug-12, 5:18 pm)
Tanglish : en thozhi
பார்வை : 185

மேலே