மனம் இருந்தால்..?

பரபரப்பான சாலையில்..
மக்களும் வாகனங்களும்
பறந்து கொண்டிருக்க...

அந்த சலசலப்பான சூழலிலும்
எந்த சலனமும் இன்றி
பார்வையற்றோர் குழு கைத்தடியை ஊன்றி
மெட்டு மேல் மெட்டு போட்டு பாடி
எட்டு மேல் எட்டு வைத்து மெல்ல நகர்ந்து வர..
பார்வையுற்ற மனிதர்கள் பாராமல் கடந்து செல்ல..
ஒரு சிலரை மற்றும் அந்த காட்சி கடத்தி செல்ல..
என் மனம் ஏனோ சற்று வெதும்பி தேம்ப
இரு கைகளும் சட்டென சட்டை பையை தேட!

"அய்யோ! இப்போ பார்த்து ஒன்றும் இல்லையே" என்று
மனம் கனமாகி அங்கிருந்து நகர்ந்தது..

சில மணித்துளிகளில் சென்ற காரியம் முடித்து..

மறுபடியும் அந்த மாற்று திரானாளிகளின்
அருகில் செல்ல நேரிடும் போது

ஒரு குரல்!!
"இந்த பத்து ரூபாயை கொஞ்சம் அவர்கள் தட்டில் போடுங்களேன்"
என்று வாகனத்தில் சென்ற முதியவர் ஒருவர் நிறுத்தி
காசை கையில் தர..

மனம் பூரணமாக உணர்ந்தது சிறு வயதில் படித்த
அந்த வரிகளை...
ஆம்!
"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!!!"

எழுதியவர் : ராகவ் (23-Aug-12, 5:47 pm)
பார்வை : 296

மேலே