பாமர பெண்ணும் பகுத்தறிவாளனும்,,,,

பாமரப்பெண்ணும் பகுத்தறிவாளனும்,,,,
=================================

நன்றாய்ப் படித்திருந்தாலும்,,,,
நாலு விஷயங்கள் தெரிந்திருந்தாலும் ,,,,
நானும் ஒரு மனிதன்தான் ,,,,
என்றான் ஒரு பகுத்தறிவாளன் ,,,,,
அவன் கிராமத்தில் சென்ற
நன்னிலை வேளையிற்
அப்பாமரப்பெண்ணின் நிழற்கண்டவன்,,,,
ஆனால் அவளோ பாமரப்பெண் என்றாலும்,,,
அழகின் பல்கலைக்கழகம்,,,,,
பேருந்து நெருங்கா
கிராமத்து ஒற்றையடிப்பாதையில்
மனதினை விட்டு சென்றான்
காதல் மன்றாடி வெற்றியுங்கொண்டான்,,,,

பகுத்தறிவாளன்,,,,,

கேளடிப் பெண்ணே இவ்வையகஞ் சாட்சி,,,,
நீயும் நானும் இயற்கையின் சாட்சி,,,,
இணைந்தாலும் ஒன்றாய் இணைந்திருப்போமா ,,?
ஒரு பொழுதும் இக்கல்யாணச் சந்தையில்,,,

காத்திருக்கிறேன் நான் உன் காலடி மந்தையில்,,,,
சொல்லடி ஒருமுறை என் மனதின் விந்தையில்,,,
விதைத்துவிட்டாய் உன் நினைவின் சிந்தையில்,,,
என்னுடன் சேரடி ,,,,, ஒருமுறைப் பாரடி ,,,,,
என்னுடல் கேட்குதே ,,,,உன் கைப்படும் நாளதை,,,
சாட்சிகள் கைப்பட ,,,,,நாணங்கள் நெருட,,,,
நான் வரும் திசை பார்த்துக் காத்திருந்தாயோ ,,,,???,
என்றவன் கேள்விக்கு ,,,,,

பாமரப்பெண் உரைத்த பாமரத்தனமான பதில்,,,,

பாமரப்பெண் ,,,,,

நாலுபக்கம் மூடிபோச்சி,,,
நாடுரெம்பக் கெட்டுப் போச்சி,,,,
உன்னநம்பிக் காத்திருக்க,,,
நேரமொண்ணுப் பாத்திருக்க ,,,
எத்தனயோ நாளுநின்னு,,,
எங்கப்பஞ்சொன்ன சொல்லு ஒண்ணு ,,
இப்போகூடக் குத்துதய்யா ,,,

நாளுங் கிழமையு நாங் காக்க,,,
ஊருமொத்தம் ஒறங்கிகெடக்க,,,
கைத்தக் கட்டிக் கூட்டிப்போக,,,
சாதி ஒண்ணு பேரச்சொல்லி
சனங்கப்பா்த்துச் சிரிக்குதய்யா,,,
யே உசுருகெடந்து தவிக்குதய்யா,,,,

உன்னச்சொல்லி என்னக் கண்டே,,,,
என்ன நானே நொந்துகிட்டே,,,
கண்டகனா வீணாப்போக,,,
சாவுவந்து நெருங்குதய்யா,,,,
தவுச்சவாய்க்குத் தண்ணியா,,
உன்னவச்ச யேவவுத்துக்குள்ள,,,
அவுஞ்சிப்போச்சு யேநெனப்பு ,,,
எங்கப்பஞ் சொன்ன வாத்தயில,,,

ஒண்டிமறத்தாம்பெத்தப் புள்ள,,,,
ஒத்தச்சொல்லுச் சொல்லயில,,,
காத்துவந்து வாயடைக்க ,,,,
கருகி நின்னேக் கட்டப்போல,,,
உருகி நின்னே மெழுகப்போல,,,

வந்தவழிப் பாருமய்யா,,,
சிறுக்கிச்சொல்லக் கேளுமய்யா,,
நொந்த இந்த மங்கையாளு,,,,
நித்தோ நின்ன வந்தனாரு,,,,
ஒண்ணுசேர வேணுமுன்னா ,,,,,
சாதி ஒண்ணு சாகவேணும்,,,,
சொல்லிபுட்டே யேங்கதய ,,,
முடிச்சிபுட்டே யேவிதிய,,,,

,,,,,,அனுசரன் ,,,

எழுதியவர் : அனுசரன் (24-Aug-12, 3:50 am)
பார்வை : 237

மேலே