விண்ணப்பம்,,,,
விண்ணப்பம்,,,,
என் உள்ளம் என்னும்,,,,அகக்கொட்டகையில்
இருக்கும்,,,ஆயிரம் விண்ணப்பங்களில்
இருந்து ஒன்றை நான் வாசிக்கிறேன்
உங்களுக்காய் ,,,,,,,
கடினமாய் காத்திருந்து விலக முற்ப்பட்ட
நேரங்கள் இந்த மன கடுதாசிகளில்
எராமளமான நிழல் நினைவுகளோடு
நான் முதல் முறை மற்றும் பல முறை
சந்தித்த வினோத காயங்கள்
என்னுள்,,,ஓலை சுவடிகளாய் ,,,,
விலக விலகத்தான் விரக ஞாபகங்களும்
அதிகரிக்கின்றது ஒவ்வொரு மணிதுளி நேரங்களிலும் ,,,,
இந்த அகக்கடிதங்களின் நனைந்த,,,
மை அழிந்து போன ஒரு சில சுவடுகளில்
காய்ந்து கிடக்கும் உதிரி காகிதங்களின் பாகங்கள்
எதோ ஒரு ஓரத்தில் ரத்தம் கசிந்த நிலையில்,,,,,
என்னை விரும்பிய இதயங்களும்,,,,
நான் நேசித்த மனங்களும் ,,,,,
எண்ணிலடங்கா விதையிடமாற்றம் தான்,,,
என்னுள் விடைக்கொடுக்கத்தான் முயன்றிருக்கிறேன் ,,,,
இருந்தாலும்,,,முடியவில்லை ,,,,தாமதித்து விட்டேன்,,,
என்னை நேசித்த இதயங்களுக்கு அப்பொழுது ,,,,
மனதில் விதைத்த எண்ணங்களோடு விரைகிறேன்
இன்று,,,,முதல் ,,,அவர்களை மீண்டும் காண,,,,
தொலை பேசியில் பேச நினைத்த பொழுதுகளில் கூட ,,,, என்னுள் எதோ ஒரு வலி கலந்த தயக்கம்தான்
நான் நேசித்த,,,,என்னை நேசித்த
அந்த மெதுவான குரல்களை என் செவிகொண்டு
கேட்கின்ற பொழுதில்,,,,,,,
நாளங்கள் கொதித்து
என் கண்களில் கண்ணீருடன்
ஒரு திரி பொருத்தாத மெழுகாய்,,,,
உருகி நிற்கிறேன் ,,,, நான்,,,,,
ஹா ஹா ஹா ஹா
,,,,அனுசரன் ,,,