அனு அனுவாக சாக நினைதால் காதல் செய்

அனு அனுவாக சாக நினைதால் காதல் சரியானதுதான்! என ஆட்டோவில் எழுதியதை பார்த்து, காதல் என்ன ஆட்கொல்லி நோயா? அனு அனுவாக வாழ நினைதால் காதல் சரியானதுதான் என மாற்றி எழுதவேண்டும்.
ஈருடலின் ஒற்றை சுவசம்தானே காதல், ஊடலும், கூடலும்தானே, காதலை ஆழப்படுத்தும் என்று எனக்குள் நானே பேசிக்கொண்டேன்....
நானும், ப்ரியாவும் பழக ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாகிறது, ஆனால், இதுநாள் வரை அவள் ஒருமுறை கூட என்னிடம் முகம் சுளித்ததில்லை கோபம் வந்தால் கூட, மவுனமான புன்னகை ஒன்றுதான் அவளின் வெளிப்பாடாக இருக்கும், உண்மையில் ப்ரியா, எனக்கு கிடைத்த வரம்.
முந்தய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு, என்னவளின் நினைவோடு, கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து, அவளுக்காக காத்திருந்தேன்...
ப்ரியாவை என்ன இன்னும் காணோமே, சீக்ராம வந்துடுவளையே, ட்ராபிக்ல மாடிகிட்டலா,போனை எடுத்து டயல் செய்தான். போன ஆப் பண்ணி இருக்கா என்ன ஆச்சி... மாலை மங்கி இரவை தொட்டு விடலாமா? என எண்ணிக்கொண்டு இருந்தது.
அதுவரை அமைதியா இருந்து கௌதமுக்கு இருப்பு கொள்ளவில்லை, ப்ரியாவுக்கு என்ன ஆசினே தெரியலையே, என்று எண்ணிய போது, அவன் முகம் வியர்த்து, உடல் முழுவதும் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. ஒருவேள வரவழிலா, ஏதாவது... சீ ... என்னடா புத்தி என்னென்னமோ நினைக்குதே,
பைக்கை எடுத்துக்கொண்டு, அவளின் ஹாஸ்டலுக்கு சென்றான், விடுதி வாசலின் நின்று, போலாமா, வேண்டாமா என சில நிமிடம் யோசித்துவிட்டு உள்ளே சென்றான்...
மேடம்.... எஸ் ... நீங்க யாரு, என்ன வேணும்,
மேடம், என் பேரு கெளதம் ... ப்ரியாவ பாக்கணும்...
ப்ரியா? வெக்கேட் பண்ணிட்டாங்களே...
என்னா, வெக்கேட் பண்ணிடாலா!
எப்போ...! ரெண்டு நாள் ஆச்சி... என்ன சொல்றீங்க, எங்க போனாங்கன்னு தெரியுமா?
அவங்க சொந்த ஊருக்கு போறதா, சொன்னாங்க வேற எதுவும் சொல்லல...
கௌதமிற்கு தலையே சுற்றுவது போல் இருந்தது, உடம்பெல்லாம் வியர்த்து, நிலைகொளைந்து
நின்றான்... ஏன் சொல்லாமலே ஊருக்கு போனா, ஒருவேள லவ் மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சி இருக்குமோ? மோர்னிங் பேசும்போது கூட வெக்கேட் பண்ணிட்டேனு சொல்லலையே... ஈவ்னிங் மீட் பண்ண வரேன்னு சொன்னாலே... என்ன ப்ரோப்ளேமுனு தெரியலையே..
சரி... அவ ஆபிசுக்கு போய் பார்க்கலாம் என்று பைக்கில் கிளம்பினான்...
அப்போது சரியாய் பத்து மணி, பிரியா ஐ.டி. இல் பணி புரிவதால் அப்போதுதான் ஒருவர் ஒருவராக வந்து கொண்டு இருந்தனர்..
உள்ளே சென்று. ரேசப்சனில் இருப்பவரிடம். பிரியா இருக்காங்களா?
வீச் பிரியா?...
சார், பிரியதர்ஷினி ...
ஓ ப்ரியதர்சனி மேடமா, அவங்க ரிசைன் பண்ணிடங்கலே...
அவங்களுக்கும், எங்க ஜி.ம்கும் நெக்ஸ்ட் வீக் மேரேச் அதன் ரிசைன் பண்ணிடாங்க... கௌதமிற்கு இதயத்தில் இடி இறங்குவது போல் இருந்தது...
சார் நீங்க?
நா... நா... பிரியா.. பிரான்ட் ...கண்ணில் நீர் கசிய அங்கிருந்து கிளம்பினான்... அவர்கள் இருவரும் சந்திக்கும் இடத்திற்கு சென்று, கண்களை இறுக மூடி,சத்தமில்லாமல் கதறி அழுதான்...
கெளதம், உன்ன ஒருநாள் கூட பாக்காம என்னால இருக்க முடியல டா, நீ இல்லாம என்னால இருக்க முடியாது செல்லம் ஐ லவ் யூ டா!
ப்ரியா பேசியதை நினைத்து எல்லாமே பொய்யா...
எப்படி பிரியா, என்ன உன்னால ஏமாத முடிஞ்சது...
விழித்து இருக்கும் போதே விழியே பிடுங்கி விசிடியே டி ...
ஐயோ கடவுளே... என்ன ஏன் இன்னும் உயிரோட வெச்சி இருக்க... என் உயிரை இபோவே எடுத்துக்கோ...
ப்ரியா... என்ன ஏண்டி காதலிச்ச...
நீ இல்லாம நா எப்படி டி இருப்பேன்...
ப்ரியா... பிரியா...... ஐ லவ் யூ டி